தமிழகத்தில் பல இன்ஜினியரிங் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவை பலமடங்கு லாபத்தை ஈட்டுவதாக இருக்கிறது .ஆனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிககுறைந்த ஊதியத்தையே அனைத்து நிறுவனங்களும் அளித்து வருகின்றன. தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் அந்த ஊழியர்களை 12 மணி நேரம் வேலை , இரவு நேர வேலை , ஊதிய உயர்வு, போனஸ் அளிக்காமை , பிஎப் பணத்தை தொழிலாளரின் ஊதியத்தில் இருந்தே பிடித்தம் செய்வது என்று தொழிலாளர் சட்டங்களில் உள்ள எந்த விதிகளையும் அது பின்பற்றுவது இல்லை . தொழிற்சங்கம் ஆரம்பித்தாலே குண்டர்களை கொண்டு தாக்குவது, பொய்வழக்கு போடுவது , அங்கீகாரம் மறுப்பது அவர்களை வேளையில் இருந்து பணிநீக்கம் செய்வது என்றால் கொடூரமாக ஒடுக்கி வருகிறது. அத்தோடு ஒரு தொழிற்சாலையில் சங்கம் ஆரம்பித்து செயல்படும் தொழிலாளர்கள் வேறு தொழிற்சாலைக்கு பணிக்கு போனபின்பு அவர்களின் சங்க பணிகள் முடங்கி விடுகிறது நூறுக்கும் குறைவாக தொழிலாளர்கள் இருக்கும் தொழிற்சாலைகளில் சங்கம் ஆரம்பிப்பது குதிரை கொம்பாக உள்ளது. தொழிற்சங்கங்களே ஆரம்பிக்க முடியாத சூழலில் ஓசூர் ,சென்னை ,திருவள்ளூர் ,கோவை என்று அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முகமாக நாம் பொறியியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் மூலம் செயல்படலாம் .இந்த கூட்டமைப்பின் நோக்கம்
1.அனைத்து தொழிற்சாலைகளிலும் சங்கம் அமைக்க அனைத்து உதவிகளையும் செய்வது.
2 .எதாவது ஒரு தொழிற்சாலையில் தொழிலாளிக்கு பிரச்னை என்றால் பொறியியல் தொழிலாளர்கள்b கூட்டமைப்பு சார்ப்பில் அனைத்து உதவிகளையும் செய்வது.
3 . ஒரு தொழிற்சாலையில் ஏதாவது பிரச்னை என்றால் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தகவலை கொண்டு சேர்ப்பது மற்றும் பொதுமக்கள் கவனம் ஈர்க்கும் போராட்டங்களை நடத்துவது.
4 .சட்டரீதியக அனைத்து உதவிகளையும் செய்வது.
5.அனைத்து தொழிலாளர்களுக்கும் உள்ள பொதுவான பிரச்னைகளை வழியுறுத்தி போராட்டகளை நடத்துவது.
இது சம்பந்தமாக கருத்தரங்குகள் ,பொதுக்கூட்டங்களை நடத்துவது. இதன் மூலம் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வலுவான கூட்டமைப்பாக இந்த அமைப்பை மாற்றுவதன் மூலம் நாம் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உடனடியாக பலன் கிடைக்கும் அத்தோடு வலுவான தகவல் தொடர்ப்பின் மூலம் நிறுவனகள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றன. அதே போல தொழிலாளர்களாகிய நாம் ஓன்று சேர்ந்து தொழிலாளர்களுக்கு அநீதி நேராமல் தடுக்க முடியும்
ஒன்றுபடுவதே நம் முன் உள்ள ஒரே வழி! வாருங்கள் தோழர்களே வரும் காலம் நம் கையில் .
Engineering workers unity centre
engineeringworkersunitycentre@gmail.com
engineeringworkersunitycentre@gmail.com
No comments:
Post a Comment